ஒரே நாளில் இப்படியொரு சாதனையா ?... விஜய்யின் 'லியோ'-வை கொண்டாடும் ரசிகர்கள் !

leo

விஜய்யின் 'லியோ' படத்தின் டைட்டில் டீசர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸாக உருவாகும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் திரிஷா, சஞ்சத் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 நாட்கள் படமாக்கப்படும் இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. 

leo

இந்த படத்தில் இருந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த டீசரில் ஒரு பக்கம் கூலாக சாக்லேட் தயாரிப்பது போன்றும், மறுபக்கம் பட்டறை ஒன்றில் வாழ் செதுக்கி கொண்டிருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இறுதியாக முகமூடி அணிந்து வந்த கும்பல் விஜய்யை தேடி வருகிறது. இந்த மாஸான டீசர் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

leo

இந்த டீசர் வெளியாகி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. யூட்யூபில் நேற்று வெளியான இந்த டீசர் ஒரே நாளில் 20 மில்லியன் ரியல் டைம் வியூஸ்களை பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதையடுத்து படத்தின் புதிய அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

 

Share this story