600க்கு 600 மதிப்பெண் எடுத்த +2 மாணவியை வாழ்த்திய நடிகர் விஜய்.

photo

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் தனக்கென ரசிகர்களாக ஒரு பெரும் பட்டாளத்தையே கொண்டுள்ளார். அதற்கு காரணம் அவர் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து மாவட்டத்திலும் உள்ள ‘விஜய் மக்கள் இயக்கம்’ மூலமாக பொதுமக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான +2 பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்று 600க்கு 600  மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை பாராட்டியுள்ளார். இந்த தகவலை  புஸ்ஸி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

photo

விஜய் தற்போது லோகேஷின் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் பிசியாக நடித்து வருவதால் அநத மாணவியை நேரில் அழைத்து பாரட்ட இயலாததால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மக்கள் இயக்கம் மூலமாக பாராடுகளை தெரிவித்ததாகவும். விரைவில் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது விஜய் சந்திப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

photo

தற்போது மாணவி நந்தினியை அழைத்து திண்டுக்கல் விஜய் மக்கள் நிர்வாக பொன்னாடை அணிவித்து பாராட்டிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் மாணவிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். 

photo

 

Share this story