"தரம் தாழ்ந்து பேசக்கூடாது".. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை !

vijay

தரம் தாழ்ந்த கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடக் கூடாது என விஜய் மக்கள் நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய், நீண்ட நாட்களாக அரசியல் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். முதலில் தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். 

vijay

இதையடுத்து அரசியலுக்கு வரும் வகையில் தொடர்ந்து மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார். அந்த வகையில் மக்கள் இயக்க ஐடி விங்க் குழுவினரின் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், வரக்கூடிய காலங்களில் வேறு ஒரு பரிமாணத்தில் செயல்பட கூடிய முன்னெடுப்புகளை செய்து வருகிறாராம். அதற்காக பல அணிகளை கட்டமைத்து வருகிறோம். 

சமூக ஊடகங்களில் ஒரு கருத்தை பதிவிடும் போது மொழி, இனம், சாதி, மத வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும். அதோடு தரம் தாழ்ந்த கருத்துக்களை பதிவிட கூடாது‌. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்கவேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்டவேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்ற பதிவுகளை ஷேர் மற்றும் லைக் செய்யக்கூடாது என்று கூறினார்.  ‌‌‌  

 

Share this story