அறுவை சிகிச்சை செய்துகொண்ட தந்தையை காண அமெரிக்காவில் இருந்து ஓடிவந்த ‘விஜய்’.

photo

நடிகர் விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட தனது தந்தையை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

தளபதி விஜய், லோகேஷ் கூட்டணியில் ‘லியோ’ ரிலீஸுக்கு தயாராகிவரும் நிலையில் அவரது அடுத்த படமான ‘தளபதி 68’ பணிகள் ஒரு புறம் ஜோராக நடந்து வருகிறது. அதன்படி அந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திரும்பி வந்திருந்தார். இந்த நிலையில் விஜய், சென்ற வேலை முடியாமல் திரும்பி வந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது விஜய்யின் தந்தையும், இயக்குநருமான, எஸ்.ஏ. சந்திரசேகருக்கு  இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சென்னையில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது. அதனால் தான் விஜய் அவசர அவசரமாக சென்னை வந்துள்ளார். வந்த கையோடு தனது தந்தையை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உடன் விஜய்யின் தாய் ஷோபாவும் உள்ளார்.

Share this story