ஐமேக்ஸில் வெளியாகிறது விஜய்யின் ‘தி கோட்’ - ரசிகர்கள் உற்சாகம்

Vijay
 விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளார். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தமிழில் ‘லியோ’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட படங்கள் ஐமேக்ஸில் வெளியாகிருந்தாலும், எக்ஸ் சமூக வலைதளங்களில் ஐமேக்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில் ‘தி கோட்’ குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.


 

Share this story