வெளியான ‘தி கோட்’ திரைப்படம் - முதல் நாளே படக்குழுவிற்கு பேரதிர்ச்சி

vijay

இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய், விரைவில் சினிமா வாழ்கைக்கு முழுக்கு போடவுள்ளார். அதற்கு முன்னதாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். கடந்த பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த விஜய், கட்சிக் கொட்டியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது.

இந்த சூழலில் அரசியல் வருகைக்கு பிறகு விஜய்யின் முதல் படமாக உருவாகியுள்ள  ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் படத்தைக் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர். இவர்களோடு திரை பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியில் பங்கேற்று படத்தை கண்டுகளித்தனர். மேலும் பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் எக்ஸ் தளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படம் வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் பேரதிர்ச்சியில்  உள்ளனர்.

Share this story