தளபதி விஜய் புதிதாக வாங்கிய பிரம்மாண்ட கார்.. வீடியோ வைரல்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படம் என்கின்றனர்.இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளாராம். மேலும் சமந்தா மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo கார்களை விற்பனை செய்துவிட்டாராம். இதற்குப்பதில் புதிதாக Lexus LM எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில், நடிகர் விஜய் வாங்கியுள்ள புதிய பிரமாண்டமான Lexus LM காரின் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தனது புதிய காரில் தனது வீட்டில் இருந்து வெளிவரும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
Thalapathy vijay’s new Luxus LM 🙌👌
— Janhvi kapoor(Parody) (@JanhviKapoor33) August 13, 2024
Good Afternoon X fam ! pic.twitter.com/dQRiikO7Tn