ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்... வீடியோ வைரல்...!

vijay

நடிகர் விஜய் நடித்து வரும்  ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னை போரூரில் நடைபெற்று வருகிறது. 

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விஜய் நடிக்கும் கடைசி படமாக உருவாகி வருகிறது ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அடுத்த மாதம் முடிவடையும் என கூறப்படும் நிலையில், தற்போது சென்னை டி ஆர் கார்டன் போரூரில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

 

Share this story