வயநாடு நிலச்சரிவு, மிகவும் வருத்தமடைந்தேன் : நடிகர் விஜய் ட்வீட்!!

vijay


கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பலரும் சிக்கியுள்ளனர்.இந்த மோசமான சம்பவத்தில் இதுவரை 63 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீட்கும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகரும் TVK கட்சியின் தலைவருமான விஜய் இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், கேரளாவில் உள்ள வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.  

Vijay


 


 

Share this story