‘கேப்டன்’ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ‘விஜய்’.
1703813063418
மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய்.
கேப்டனின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கேப்டனுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் கேப்டனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய விஜய் கேப்டனின் உடலை பார்த்தவாரே சில நிமிடம் நின்றார்.
கேப்டனின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அண்ணா சாலையில் உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.45 மனிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.