தாய்லாந்திருந்து சென்னை திரும்பிய விஜய்

தளபதி68 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற நடிகர் விஜய், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
Thalapathy @actorvijay is back to Chennai after completing #Thalapathy68 shooting in Thailand. pic.twitter.com/Ka7nJmVY7B
— Thalapathy Vijay Fans (@VijayFansPage) November 13, 2023
‘லியோ’ படத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, முதல் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் தாய்லாந்து சென்றார். இந்நிலையில், அங்கு படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் விஜய் தாய்லாந்திருந்து புறப்பட்டு சென்னை திரும்பியுள்ளார்.