'லியோ' ஆட்டம் ஆரம்பம்- மிரளவைக்கும் ப்ரீ புக்கிங் தகவல்.

photo

தளபதி  விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகிவரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடிக்கிறார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

photo

உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 10000+ டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக அஹிம்சா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் போஸ்டர் மூலமாக தெரிவித்துள்ளது. இதனால் தளபது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ரசிகர்களின் ஆர்வத்தை பார்த்தால் தளபதியின்  'லியோ' நிச்சயம் பல சாதனைகள் புரிந்து அவரது சினிமா வாழ்வில் தவிர்க்க முடியாத படமாக மாறும் என எதிர்பார்க்கலாம். 


 

Share this story