பரோட்டா மாஸ்டராக நடிக்கும் விஜய் சேதுபதி -எந்த படத்தில் தெரியுமா?
நடிகர் விஜய சேதுபதி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான காதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .அவர் ஏற்கும் பாத்திரங்கள் அவருக்கு நல்ல பொருத்தமாக அமைகிறது .மகாராஜா முதல் சமீபத்தில் வெளியான ஏஸ் படம் வரை அவர் பல வித்தியாசமான கேரக்ட்டர்களில் நடித்து வருகிறார் .அதன் படி தலைவன் தலைவி படத்திலும் ஒரு வித்தியாசமான கேரக்ட்டரில் நடிக்கிறார்
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ள படம் 'தலைவன் தலைவி'. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும்.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, பாபா பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
குடும்பப் பின்னணியைக் கதையாக வைத்து உருவாகியுள்ள இந்த வரும் 25-ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் சேதுபதி பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி புரோட்டா மாஸ்டராக கலக்கி உள்ளார்
இதற்கிடையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தணிக்கை வாரியம் தலைவன் தலைவி படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது.

