விஜய் சேதுபதி நடிக்கும் பாக்கெட் நாவல் -யார் தயாரித்து இயக்குகிறார் தெரியுமா ?
‘பாக்கெட் நாவல்’ படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குவது மட்டுமின்றி, டைலர்டர்டன் அண்ட் கினோஃபிஸ்ட் நிறுவனம் சார்பில் தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்ட்ரூ லூயிஸ் கதை, திரைக்கதை எழுதுகிறார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற வெப்தொடரில், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற எபிசோடுக்கு இளையராஜா இசை அமைத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இக்கூட்டணி இணைந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ், கன்னடம் உள்பட 4 மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டு, கடந்த பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று இசை அமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இளையராஜாவுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைப்பதாக கூறப்படுகிறது. தியாகராஜன் குமாரராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இளையராஜாவே படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

