"அவரது இயக்கத்தில் நடிக்கவே கூடாது என்று இருந்தேன்" -விஜய் சேதுபதி யாரை சொல்கிறார் தெரியுமா ?

vijay-sethupathi-45

நடிகர் விஜய சேதுபதி பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் .இவர் தற்போது பசங்க பட டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் .இப்படத்தில் நடித்தது பற்றி விஜய் சேதுபதி சில தகவலை பகிர்ந்துள்ளார் 
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஜோடி சேர்ந்துள்ள தலைவன் தலைவி படம், வரும் 25ம் தேதி திரைக்கு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.  சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்கும் படம், ‘தலைவன் தலைவி’. செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். படம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது: இந்த படத்துக்கான பணிகள் தொடங்கும்போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன.

பாண்டிராஜும், நானும் இணைந்து பணியாற்றுவோம் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை. என்னுடன் இணைந்து பணியாற்றவே கூடாது என்று அவரும், அவரது இயக்கத்தில் நடிக்கவே கூடாது என்று நானும் இருந்த காலம் அது. இருவருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்னையும் இல்லை. அதனால், அழகான தருணத்தில் ஒரு சின்ன பூ எப்படி இயல்பாக மலருமோ, அதுபோல் எங்களுக்கு இடையிலான கோபம் மறைந்து அன்பு மலர்ந்தது. பிறகு எல்லா விஷயங்களும் வேகமாக நடந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.

Share this story