ஹிந்தியிலும் ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதி படம் -எந்த படம் தெரியுமா ?
தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் மீது பல எதிர்பார்ப்புகள் உள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வரவுள்ள ‘பாக்கெட் நாவல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கன்னட நடிகரும், இயக்குனருமான ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இதன் முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், விஜய்சேதுபதி நடித்து சமீபத்தில் வெளியான ‘பத்தா’ படத்திற்கு இந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ‘பாக்கெட் நாவல்’ படத்தை இந்தியில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்தியில் ஒரு நல்ல படத்துக்காக காத்திருக்கும் மாளவிகா மோகனனுக்கு இந்த முடிவு பேருதவியாக இருக்கும். இதன்மூலம் அதிகப்படியான இந்தி ரசிகர்களிடம் இப்படம் சென்று சேரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

