"என் மகன் என்பதை சூர்யா சேதுபதி நிரூபித்துள்ளார்" -விஜய் சேதுபதி பெருமிதம்
1751608133941

விஜய் சேதுபதி முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார் .இவர் நடிப்பில் பல படங்கள் வசூலை அள்ளியது .இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர் .இந்நிலையில் இவரின் இளைய மகன் சூர்யா சேது பதி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் .
சூர்யா சேதுபதி நடித்திருக்கும் புதுப்படத்தின் பெயர் ஃபீனிக்ஸ். ஆக்ஷன் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தை அனல் அரசு இயக்கியிருக்கிறார். இதில் வரலக்ஷ்மி சரத்குமார், தேவதர்ஷினி, சம்பத், அபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.விரைவில் வெளியாக இருக்கும் ஃபீனிக்ஸ் படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டதோடு, விஜய் சேதுபதியும் படத்தை வந்து பார்த்து, வியந்தார் .