அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வரவேற்பு.. விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

Vijay sethupathi

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சிகாகோ சென்றார். சிகாகோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபின் சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.

null



அந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை 'சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்' என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலினின் புகைப்டபத்தை பகிர்ந்த விஜய் சேதுபதி, அமெரிக்க வாழ் தமிழர்களிடம் இருந்து எங்கள் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த அபாரமான வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது." என தெரிவித்துள்ளார். 

Share this story