வாழை படத்தில் இருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டி கொண்டு இருக்கிறேன் - விஜய் சேதுபதி

Vijay sethupathi

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழை. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாழை படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதி, "மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் மிக அற்புதமான திரைப்படம். படத்தை பார்த்த பிறகு படம் முடிந்தது போல தெரியவில்லை, இன்னும் அந்த படத்துடன் இருப்பது போன்றே இருக்கிறது. வாழை திரைப்படத்தில் பேசப்பட்ட அரசியல், வசனம், நடித்த அனைவரும், அந்த ஊரில், அவர்களின் வாழ்க்கைக்கு மத்தியில் அந்த ஊர்காரர்களில் ஒருவராக அங்கிருந்து இன்னும் வெளி வர முடியாமல் மாட்டிக் கொண்டு இருக்கிறேன்.


வாழை திரைப்படம் எடுத்ததற்கு மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை பதிய வைத்ததற்கும் நன்றி. சாதாரணமாக கடந்து போகிற செய்திகளுக்கு பின்னால் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது, நம் வாழ்க்கையின் மீது நமக்கு உள்ள சில கேள்விகளை எழுப்பும் என நம்புகிறேன். வாழை திரைப்படத்தை திரையரங்குகளில் வந்து பாருங்கள். உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைக்கும்" என்று பேசினார். விஜய் சேதுபதி பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் பதிவில், வாழை திரைப்படத்தை பார்த்த பின் தன் உணர்வை பெரும் உருக்கத்தோடு பகிர்ந்துகொண்ட தமிழ்சினிமாவின் மக்கள் செல்வன் அவர்களுக்கு எங்கள் நன்றியும் ப்ரியமும் " என்று பதிவிட்டுள்ளார்.

Share this story