விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகும் அடுத்த பட அப்டேட்...

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் உடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியானது. பாண்டிராஜ் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவடைந்த நிலையில், அடுத்து யார் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்தது. அந்த வகையில், இயக்குனர் அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தற்போது இதற்கான அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் விஜய்சேதுபதி ஈடுபட்டு வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.