விஜய் சேதுபதி 'உஷாரா இருங்க சார்'.. வெளியான பிக் பாஸ் 8 ப்ரோமோ...

vijay sethupathi

விஜய் டிவியின் பிக் பாஸ் 8வது சீசன் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கிறது. முன்பு தொகுப்பாளராக இருந்த கமல் ஷோவில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்திருகிறார்.தற்போது புது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி ஊர் முழுக்க பயணித்து பலரிடமும் கருத்து கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.



 மக்கள் பலரும் பல்வேறு அட்வைஸ்களை விஜய் சேதுபதிக்கு சொல்கின்றனர். 'வீக் எண்டு என்றால் நல்லவங்க மாதிரி பம்முவாங்க. ஆனால் வார நாட்களில் எகிறுவாங்க. உஷாரா இருங்க சார்' என ஒருவர் அட்வைஸ் கூறுகிறார்.இப்படி பலரிடம் அட்வைஸ் பெற்று தொகுத்து வழங்கப்போகும் விஜய் சேதுபதி எப்படி ஷோவை நடத்துகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story