வில்லன் கெட்டப்பே வேண்டாம் - விஜய் சேதுபதி முடிவு

வில்லன் கெட்டப்பே வேண்டாம் - விஜய் சேதுபதி முடிவு

ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பல்வேறு மொழிப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவை திரையிடப்படுவது வழக்கம்.அந்த அவகையில் இந்த ஆண்டு தமிழ் மொழி சார்பாக பொன்னியின் செல்வன், விடுதலை ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடந்த இந்த விழாவில் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது நடிப்பில் தயாரான காந்தி டாக்ஸ் படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் இயக்குயுள்ளார். வசனமே இல்லாத இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வில்லன் கெட்டப்பே வேண்டாம் - விஜய் சேதுபதி முடிவு

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, இனி வில்லன் வேடத்தில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். வில்லன் வேடத்தில் நடிக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், இதனால், அடுத்த சில வருடங்களுக்கு வில்லனாக எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Share this story