அட்டகாசமான நடைபெறும் ஆடியோ லாஞ்ச்.. விஜய் சேதிபதியின் ‘டிஎஸ்பி’ படத்தின் மாஸ் அப்டேட் !

dsp

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிஎஸ்பி’ படத்தின் ஆடியோ லாஞ்ச் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மாஸ் ஹிட்டடித்த ‘சேதுபதி’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி போலீஸ் கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎஸ்பி’. மிரட்டலான போலீஸாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்.

dsp

இந்த படத்தில் அனு க்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபாகர், ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். 

dsp

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை டிரேட் சென்டரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.  

Share this story