விஜய் சேதுபதி - ஹரி - நயன்தாரா: பேச்சுவார்த்தை தீவிரம்
நயன்தாரா தயாரிப்பில் விஜய் சேதுபதி - ஹரி கூட்டணி இணையுடம் படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஹரி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ரத்னம்’. விஷால் நாயகனாக நடித்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் ஹரி. இக்கதையினை சில நாயகர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
தற்போது இக்கதையில் விஜய் சேதுபதியை நாயகனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஹரி. அதுமட்டுமன்றி ஹரி - விஜய் சேதுபதி கூட்டணி படத்தினை நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கதையாக அனைவருக்கும் பிடித்திருப்பதால், படத்தின் பொருட்செலவு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. சம்பளம், பொருட்செலவு என அனைத்துமே சுமுகமாக முடியும் பட்சத்தில் இப்படத்தினை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் ஒரு மாதத்தில் தெரியவரும்.