நடனம் என்றால் எனக்கு பயம் - விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் சாதனைகள் படைத்த முன்னால் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும், டான் டான் குரு ஸ்டெப்ஸ் 2023 விருது விழா அண்மையி்ல நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்று பேசிய விஜய் சேதுபதி, நடனம் என்றாலே எனக்கு பயம். என்னுடன் பணியாற்றிய அனைத்து மாஸ்டர்களுக்கும் அது தெரியும். சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில் ஆச்சர்யப்படும் படியாக ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்களை திறமை போற்றப்பட வேண்டியது. பழைய காலப்பாடல்களை பார்க்கும்போது, அதில் வரும் நடனம் எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். சில பாடல்களை ஒரே நாளில் எடுத்ததாக சொல்வார்கள். அது மிகப்பெரிய ஆச்சரியம் என்றார்.