அடுத்த பிக் பாஸ் விஜய் சேதுபதி தான்... வந்தாச்சு புது பிக்பாஸ் ப்ரோமோ...

Vijay sethupathi

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதுவரைக்கும் ஏழு சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் எட்டாவது சீசனில் இருந்து அவர் விலகி இருந்தார். அதைத்தொடர்ந்து யார் இந்த சீசனில் தொகுப்பாளராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று அறிவித்திருக்கிறார்கள்.

 

null


விஜய் சேதுபதி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கடுமையாக நடந்து கொண்டது எனக்கே விருப்பமில்லை என்று சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராக கலந்து கொள்ளும் போது கமல்ஹாசன் போல இவரும் போட்டியாளர்கள் மனம் கோணாத வகையில் ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிகழ்ச்சியை கொண்டு போவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனிடையே விஜய் சேதுபதி  பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்கும் செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this story