கருடன் இயக்குனருடன் கைக்கோர்க்கும் சசிகுமார் - விஜய் சேதுபதி...!

sasikumar

சசிகுமார் - விஜய் சேதுபதி ஆகியோர் கருடன் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கருடன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் அடுத்ததாக தி லெஜெண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் லெஜெண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார்.

sasikumar
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் துரை செந்தில்குமார் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் திரைப்படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஒரு டூவல் ஹீரோ கதையாக உருவாக இருக்கிறது என கூறப்படுகிறது.ஏற்கனவே இருவரும் இணைந்து சுந்தர பாண்டியன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 
  

Share this story