‘லியோ’-ல் விஜய்யுடன் இணையும் விஜய் சேதுபதி.. ஆனா அங்கதான் ட்விஸ்ட் இருக்கு !
‘லியோ‘ படத்தில் விஜய்யுடன் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது ‘லியோ’. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை விரைவாக முடிக்க படக்குழுவினர் வேகமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே இந்த படம் லோகேஷ் யூனிவர்ஸில் உருவாகிறதா அல்லது தனி படமாக உருவாகி வருகிறதா என்ற குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த குழப்பத்திற்கு தெளிவு பிறக்கும் வகையில் தற்போது ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இணையவுள்ளராம். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லையாம். அதற்கு பதிலாக பின்னணி குரல் மட்டும் கொடுக்கவுள்ளாராம். அதற்காக மூன்று நாட்கள் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதாவது ‘விக்ரம்‘ படத்தில் ‘கைதி’ கார்த்தி பின்னணி குரல் கொடுத்தது போல் இந்த படத்தில் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுக்கவுள்ளார். இதை வைத்து பார்த்தால் ‘லியோ’ படம் லோகேஷ் யூனிவர்ஸில் உருவாவது உறுதியாகியுள்ளது.