பாலா சரவணனை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி...!
நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் கதாநாயகர்களாக நடித்து வெளியாகியுள்ள படம் லப்பர் பந்து. இந்தப் படம் கடந்த வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலர் படம் குறித்து தங்களது கருத்துக்களை இணையதளத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் பார்த்த அனைவரும் பெரும்பாலும் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த விஜய் சேதுபதி படத்தில் நடித்த நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து முத்தம் கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். படம் பார்த்த விஜய் சேதுபதி, நடிகர் பால சரவணனை நேரில் சந்தித்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
null#Lubberpandhu பார்த்துவிட்டு நேரில் அழைத்து…
— Bala saravanan actor (@Bala_actor) September 28, 2024
”பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா…உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பி”னு
கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதிபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு… pic.twitter.com/4xyUviN7eC
இது தொடர்பாக நடிகர் பால சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், " லப்பர் பந்து பார்த்துவிட்டு நேரில் அழைத்து..."பாலா டேய் உன்ன படத்துல அவ்ளோ ரசிச்சன்டா உனக்கு தியேட்டர்ல மக்கள் கைதட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருஞ்சுடா கல்கிட்டடா தம்பி..."னு கட்டி அனைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய் சேதுபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்....Love u so much ணே..." என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.