அடேங்கப்பா எத்தன படம்... விஜய் சேதுபதி கைவசம் வைத்திருக்கும் படங்களின் பட்டியல்!

vijay-sethupati-4

விஜய் சேதுபதி தற்போது தமிழில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ச்சியடைந்துள்ளார். இப்போது தமிழ் என்றில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி தற்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள படங்களில் பல ரிலீஸ் ஆகவும் காத்திருக்கின்றன. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள 20 படங்களுக்கு மேல் உறுதியாகியுள்ளன. 

Vijay Sethupathi and Kalaiyarasan dub for Laabam

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநான் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.  டி இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

vikram kamal

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடித்துள்ள மாமனிதன். இந்தப் படத்திற்கு யுவன் மற்றும் இளையராஜா இணைந்தது இசையமைத்துள்ளனர், 

விஜய் சேதுபதி நடிப்பில் அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் துக்ளக் தர்பார் உருவாகியுள்ளது. பார்த்திபன், அதிதி ராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன், கருணாகரன் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். செப்டம்பர் 10-ம் தேதி சன் டிவியில் இந்தப் படம் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.  

AnnabelleSethupathi

அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி அனபெல் சேதுபதி படத்தில் நடித்துள்ளார். நடிகை டாப்ஸி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி திரைப்படம் முதலில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது ஓடிடி முடிவைக் கைவிட்டு படத்தை தியேட்டரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல். சமந்தா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். 

பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம். 

mumbai-kar-4

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் படத்தில் சிறப்புத் தோற்றம். 

மலையாளத்தில் இந்து விஎஸ் என்பவர் இயக்கத்தில் 19 (1)(a) 

சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ள இடம் பொருள் ஏவல். இந்தப் படம் 2018-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டு வெளியாகத் தயாராக உள்ளது.

மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற பான் இந்தியா படம். இந்தப் படத்தில் கத்ரினா கைப் கதாநாயகியாக நடிக்கிறார். 

vjs and sundeep

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் மைக்கல் படத்தில் சிறப்பு ஆக்ஷன் கதாபாத்திரம். 

மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா நடித்து வரும் பிசாசு 2 படத்தில் சிறப்புத் தோற்றம். 

சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் படத்தில் சிறப்புத் தோற்றம். 

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம். 

கிஷோர் இயக்கத்தில் உருவாகும் காந்தி டாக்ஸ் என்ற மௌனப் படம். 

பேமிலி மேன் இயக்குனர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸ். 

Share this story