இறுதிக்கட்டத்தில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’... புதிய அப்டேட்

maharaja

விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகும் ‘மகாராஜா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, பல மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 'குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் விஜய் சேதுபதிக்கு இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

maharaja

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவர்களுடன் நட்டி (எ) நட்ராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். 

 

Share this story