``குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி"
மகாராஜா வெற்றியைத் தொடர்ந்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. ஆறுமுகக்குமார் இயக்கும் ‘ஏஸ்’ படத்தில் நடித்துமுடித்துள்ள இவர், வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை 2’ மற்றும் மிஷ்கின் இயக்கும் ‘ட்ரெயின்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்திலும் பணியாற்றி வருகிறார்.
படப்பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வரும் விஜய் சேதுபதி தற்போது தனது ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர், அவருக்கு பிறந்த குழந்தையை தனது மனைவியுடன் சென்று விஜய் சேதுபதியை சந்தித்துள்ளார். குழந்தையை விஜய் சேதுபதியிடம் கொடுத்து பெயர் சூட்ட சொல்லி கேட்டுள்ளார்.
விஜய் சேதுபதி அந்த குழ்நதையை வாங்கி மார்போடு அணைத்து கனியன் என பெயர் சூட்டினார். மேலும் “மிஸ்டர் கனியன்... ஹாய் கனியன்” என குழந்தைக்கு முத்தமிட்டு “நல்லா இரு... வாழ்க நீ” என்று வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து கையில் ஏந்தியபடி கனியனை கொஞ்சி விளையாடினார். இது தொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.