விஜய் சேதுபதி - யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய படம்... மலேஷியாவில் தொடங்கிய படப்பிடிப்பு !

vijay sethupathi

விஜய் மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ‌ 

vijay sethupathi

 தென்னிந்தியாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. அடுத்தடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’. பி.ஆறுமுக குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்திருந்தார். 

vijay sethupathi

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி மற்றும் பி.ஆறுமுக குமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ருக்மணி வசந்த், பி.எஸ்.அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay sethupathi

இந்த படத்தில் கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவாளராகவும், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை 7 சி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மலேசியாவில் இன்று தொடங்கியது. விரைவில் இந்த படம் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Share this story