உலகப் புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதி

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இந்த படத்தை ‘அந்தாதுன்’ பட இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ராதா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  ‘மெரி கிறிஸ்துமஸ்’ படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில பல காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது.  அதன் பின்னர் டிசம்பர் 15, டிசம்பர் 8 என மாற்றப்பட்ட நிலையில் தற்போது படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. இறுதியாக ஒருவழியாக படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். 

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதி

இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அட்டைப் பக்கத்தில் விஜய் சேதுபதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இது வைரலாகி வருகிறது. 

Share this story