பிரபல ஹீரோவிற்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. வெறித்தனமான அப்டேட்

sardar 2

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சர்தார்’. உளவாளி குறித்த கதைக்களம் கொண்ட இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியான இப்படம் 80 கோடி வசூலித்து நல்ல விமர்சனங்களை பெற்றது. 

sardar 2

இந்த வெற்றிக்கு பிறகு ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன்படி இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகளை இயக்குனர் மித்ரன் ஜவஹர் செய்து வருகிறார். முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

sardar 2

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர் ஒத்துக்கொண்டால் கார்த்தி - விஜய் சேதுபதி காமினேஷன் வெறித்தனமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ஜப்பான்’ படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்சனையால் அது மிஸ்ஸானது.

இதற்கிடையே சமீபகாலமாக ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படங்கள் சொதப்பினாலும், வில்லனாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதனால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலேயே விஜய் சேதுபதி அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே ‘மாஸ்டர்’, ‘ஜவான்‘ உள்ளிட்ட சில திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story