'மகாராஜா' படத்தை காரணமாக கூறி 'ராம் சரண்' படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி

ram charan vijay sethupathi

தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள ராம் சரண் படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்திருக்கிறார். விஜய் சேதுபதி கடைசியாக 'மகாராஜா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் ஒரு சிறந்த படமாக அமைந்தது.சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றாக உள்ளது.இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் ராம் சரணின் தந்தையாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ஆனால், 'உப்பெனா' மற்றும் 'மகாராஜா' ஆகிய படங்களை காரணமாக கூறி நடிக்க மறுத்திருக்கிறார்.

Vijay sethupathi

அதன்பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.'உப்பெனா' மற்றும் 'மகாராஜா' ஆகிய படங்களை ஏன் காரணமாக கூறினார் என்று பார்க்கையில், இதற்கு முன்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'உப்பெனா' படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதேபோல சமீபத்தில் வெளியான 'மகாராஜா' படத்திலும் தந்தையின் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பார் விஜய் சேதுபதி.இவ்வாறு தந்தை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக குறிப்பிடத்தக்க பாராட்டைப் பெற்றிருந்தாலும், எதிர்காலத்தில் இதேபோன்ற பாத்திரங்களில் நடிக்க தயங்குவதாக இயக்குனர் புச்சி பாபுவிடம் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். மீண்டும் தந்தையாக நடிப்பதை விட மற்ற கதாபாத்திரங்களையும் ஆராய விரும்புவதாக கூறி உள்ளார்.

Share this story