மன்சூர் அலிகான் நடிக்கும் ‘சரக்கு’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி !

Sarakku Congrats team.

 மன்சூர் அலிகான் நடிக்கும் ‘சரக்கு’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார். 

90-களில் பிரபல வில்லன் நடிகராக இருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். முன்னணி ஹீரோக்களின் படங்களில் மிரட்டியுள்ள அவர், தற்போது காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹீரோவாக புதிய படம் ஒன்றில் களமிறங்கியுள்ளார். 

அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இதில் மன்சூர் அலிகான் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், ரெடின் கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

sarakku

 ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் விபின் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து ஒரு புரட்சி செய்யும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 


 

 

Share this story