சாச்சனாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.. வேற லெவல் புரமோ..!

vijay sethupathi

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை முதல் நாளே செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாக கொண்டு சென்றது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், இன்றைய முதல் புரோமோவில் அவர் சாச்சனாவிடம், "பெண்கள் அணியில் ஒரு மூன்று பேர் வீக்காக இருக்கிறார்கள் என்று சொன்னியே, அதை அவர்களுக்கும் சொன்னியா என்று கேட்க, "இல்லை," என்று சாச்சனா கூறினார்.

உடனே விஜய் சேதுபதி, "ரவீந்தர் சார், சாச்சனா உங்க கிட்ட என்ன சொன்னார்" என்று கேட்க, உடனே ரவீந்தர், ’அன்சிகா, சௌந்தர்யா, சுனிதா" ஆகியோர் வீக் போட்டியாளர்கள் என சாச்சனா கூறியதாக தெரிவித்தார். உடனே சாச்சனா சமாளித்து, "நான் சொன்னேன், ஆனால் அதற்கு விளக்கம் கொடுத்தேன்," என்று சொல்ல, "பெண்கள் அணியில் வீக்காக இருக்கிறார்கள் என்று உனக்கு தோன்றியது அல்லவா, நீ ஏன் அவர்களிடம் இதை சொல்லவில்லை," என்று கேட்டார்.



அதற்கு சுனிதா, "எனக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. அதுதான் நம்மளோட யூனிட்டி மண்ணாங்கட்டி என்று பேசிக் கொண்டிருக்கிறோம், வீக்கர் என்பதை அங்கே சொல்லாமல் நம்ம கிட்ட சொல்லி இருக்கலாம்," என்று கூறினார். இதனால் சாச்சனா முகம் இறுகியதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வந்துள்ளது.எனவே, இன்றைய எபிசோடில் சாச்சனாவை விஜய் சேதுபதி மற்றும் பெண்கள் அணியினர் வறுத்தெடுத்திருப்பார்கள் என்பது இந்த ப்ரோமோவில் இருந்து தெரிய வருகிறது.

Share this story