ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி...

ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ‘உப்பென்னா’ படத்தின் மூலம் பிரபலமான புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் உண்மை சம்பவங்களை வைத்து சில கற்பனை கலந்து உருவாகும் திரைப்படம் ஆகும். கிராமத்து பின்னணியில் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் விளையாட்டு வீரராக ராம் சரண் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் கூடுதல் தகவலாக, படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.