நான் பான் இந்தியா ஸ்டாரா ? - விருப்பமில்லை என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி !

vijay sethupathy
பான் இந்தியா ஸ்டார் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். 

விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஃபார்சி’. ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் மூலம் பிரபலமான ராஜ் மற்றும் டிகே இணைந்து இந்த வெப் தொடரை இயக்கியுள்ளனர். இந்த வெப் தொடரில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.  இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது. 

vijay sethupathy

இதையொட்டி இந்த வெப் தொடரின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, என்னை பான் இந்தியா ஸ்டார் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை. நல்ல நடிகர் என்று பாராட்டுவதையே நான் விரும்புகிறேன். பான் இந்தியா என்ற ஒரு விஷயம் நடிகர் மற்றும் இயக்குனருக்கு அழுத்தம் தரக்கூடியது. 

குஜராத்தி, பொங்காலி என எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க தயாராகவே உள்ளேன். உடல் எடை குறித்த கேள்விக்கு, எனக்கு டயட்டில் நம்பிக்கையில்லை. படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் உடற்பயிற்சி செய்ய முடிவதில்லை. பிடித்த உணவுகளை சாப்பிட முடியவில்லை என்றால் வாழ்க்கை திருப்தியடையாது என்று கூறினார். 

 

 

Share this story