ஜாக்குலினை பொளந்து கட்டிய விஜய் சேதுபதி..! ப்ரோமோ..
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று 14வது நாளாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் மனதில் பட்டதை போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். இதனால் சனி, ஞாயிறு நாட்களின் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக, நேற்று சாப்பாட்டு சண்டை குறித்து அவர் விசாரித்த விதம், ஒவ்வொருவரும் செய்த தவறை சுட்டிக்காட்டிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
இந்த நிலையில், இன்று ஜாக்குலின் தாக்கப்படும் காட்சிகள் உள்ளன. இன்றைய புரமோ வீடியோவில், ‘ காலையிலிருந்து மாலை வரை என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று ஜாக்குலின் கூறியபோது இடைமறித்த விஜய் சேதுபதி ‘நீங்கள் ரூல்சை பிரேக் பண்ணினீர்கள், அதனால தான் தண்டனை கொடுத்தார்கள். ஆனாலும், காலையிலிருந்து இரவு வரைக்கும் என்னை தான் டார்கெட் செய்தார்கள் என்றால், அதன் அர்த்தம் என்ன?" என்று கேட்கிறார்.
Promo 1
— BB Mama (@SriniMama1) October 20, 2024
Roast parcel for #Jacqueline for breaking the rules & crying 💥💥#BiggBoss8Tamil #biggbosstamil8 #BiggBossTamilSeason8 #BBMama #jacquelinefernandez
pic.twitter.com/QKAmareFGM
மேலும் ‘நடந்த காரணங்களை ஒவ்வொன்றாக விசாரிக்கும்போது, உங்களுடைய தவறும் இருக்கு, நீங்கள் ரூல்ஸ் பிரேக் பண்ணினீர்கள், ரஞ்சித் சார் கேட்கிறார், ஒரு ஐந்து நிமிடம் கழித்து, தருகிறேன் என்று சொல்கிறீர்கள், ஜெப்ரி அதை பார்க்கிறான், அவன் கூடவும் சண்டைக்கு போறீங்க..
நீங்கள் எல்லாவற்றையும் பண்ணி முடித்துவிட்டு, நீங்கள் மனிதாபிமானம் நடந்துக்கோங்க, ஆனால் நான் ரூல்ஸ் மீறுவேன் என்று சொன்னால், அப்ப நீங்கள் பண்ணியதற்கான எதிர்வினை தானே அது’ என்று விஜய் சேதுபதி கூறும்போது, ஜாக்குலின் விளக்கம் அளிக்க முடியாமல் திணறிக்கொண்டே இருப்பதுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவாக வருகிறது.