விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் பாலிவுட் இயக்குனர்... 'மகாராஜா' படத்தின் மாஸ் அப்டேட் !
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 'மகாராஜா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
'குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். அவர் தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நட்டி (எ) நட்ராஜ், முனீஷ்காந்த், அருள்தாஸ், ‘பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் கொடூரமான வில்லனாக மிரட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.