விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ : ரிலீஸ் எப்போது?
விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அதேசமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதற்கிடையில் தான் இவர், மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன்படி டார்க் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஏறத்தாழ இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு வருவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து டிம்பிள் ஹயோதி, பப்லு பிரித்விராஜ், வினய் ராய், சம்பத்ராஜ், கணேஷ் வெங்கட்ராமன், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இயக்குனர் மிஸ்கின் இந்த படத்திற்கு இசையமைக்க பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.