அட்லீ தயாரிப்பில் நடிக்கும் விஜய் சேதுபதி!
![Vjs](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/80bc3370aefd566ea76b3b8f76f708de.png)
தமிழில் அட்லீ தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ படத்தை தயாரித்துள்ளார் அட்லீ. இதனை அட்லீயுடன் இணைந்து முரத் கேடானியும் தயாரித்திருக்கிறார். டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள ‘பேபி ஜான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்க இருப்பதாக அட்லீ மற்றும் முரத் கேடானி இணைந்து அறிவித்துள்ளார்கள். இப்படத்துக்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக அட்லீ தெரிவித்துள்ளார்.
இப்படத்தினை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கவுள்ளதாக தெரிகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதனைத் தொடர்ந்து இப்போது அவருடைய படத்தையே அட்லீ தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.