மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி ?
நடிகர் விஜய் சேதுபதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அடுத்தது ஏஸ், ட்ரெயின், காந்தி டாக்ஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. அது மட்டும் இல்லாமல் இவர் நடித்திருக்கும் விடுதலை-2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அடுத்தது பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இவ்வாறு பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. எனவே மாரி செல்வராஜ் தற்போது பைசன் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். அதற்குப் பிறகு தான் விஜய் சேதுபதியை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்