‘சூர்யா 45’ படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதியா?
சூர்யா 45 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படமானது சூர்யாவின் 45 ஆவது படமாக உருவாகி வருகிறது. எனவே இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜி கே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதே சமயம் படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. அதன்படி தற்போது புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. சூர்யா 45 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா 45 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள கேரக்டர் வில்லன் கேரக்டராக இருக்கலாம் எனவும் விரைவில் விஜய் சேதுபதி இதற்கு ஓகே சொல்ல வாய்ப்புள்ளது எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி ஒரு சில காரணங்களால் இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா 45 படத்தின் மூலம் வில்லனாக களம் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.