விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை... த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் மிரட்டலான படம் !
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாறுப்பட்ட நடிப்புக்கு சொந்தக்காரர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன் என இருவேறு கோணங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அவரின் நடிப்புக்கு பல மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழை தாண்டி, தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் புதிய பான் இந்தியா திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. அந்த படத்தில் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் விபின் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். ஏற்கனவே தமிழில் ‘தலைவி’ படத்தின் மூலம் கால் தடம் பதித்துள்ளார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.