ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி

விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நா அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார். பின்னர், சென்னை திரும்பிய ஜேசன், நடிப்பில் ஈடுபாடில்லை என்று கூறி இயக்குநராக விரும்புவதாக கூறினார். தொடர்ந்து ஒரு சில குறும்படங்களையும் அவர் இயக்கினார். இதைத் தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் புதிய படம் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதன் மூலம், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தொடக்கத்தில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இசை அமைப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அனிருத் இசை அமைப்பதாக தகவல் வெளியானது.

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்று முடிந்ததாகவும், விரைவில் புகைப்படங்கள் வெளியாகும்  என்றும் தெரிகிறது. 

Share this story