மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரைன்

vijay sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் இயக்குனர் மிஸ்கின். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு உதயநிதி மற்றும் அதிதி ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கியான கதாப்பாத்திரத்தில் மிஸ்கின் நடித்தார். 2023 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி வைத்து டிரெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது இதில் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். முகம் முழுவதும் அடர்த்டியான தாடியுடன் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார்.

 

null


இப்படத்திற்கு ஃபௌசியா பாதிமா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் இதற்கு முன் உயிர், விசில், இவன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவராவர். 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு ஒளிப்பதிவு செய்யும் திரைப்படம் ட்ரைன் ஆகும்.ட்ரைன் படத்திற்கு மிஸ்கின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலிற்கு ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story