சத்யராஜூடன் சமமாக நடிக்க ஆசை - விஜய் சேதுபதி

சத்யராஜூடன் சமமாக நடிக்க ஆசை - விஜய் சேதுபதி

தென்னிந்தியாவில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது திரைப்படங்கள் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திகின்றனர். அதற்குக் காரணம் ஹீரோ, வில்லன் என எந்த கதைப்பாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றபடி நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தின் மூலம் வில்லனாகவும் தோன்றினார். மாஸ் நடிகரான விஜய்யின் நடிகை நடிப்பையே ஓவர்டெக் செய்யும் அளவிற்கு விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருந்தார். இதையடுத்து மீண்டும் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்திலும் வில்லனாக நடித்தார். 

சத்யராஜூடன் சமமாக நடிக்க ஆசை - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வௌியானது. இந்நிலையில், சிங்கப்பூர் சலூன் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, சத்யராஜிடம், உங்களுடன் சரிக்கு சமமாக நடிக்க வேண்டும். குணச்சித்திர வேடத்தில் இல்லை, இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share this story